காலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை : வட பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்!!

416

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்ககளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் எனுவும், நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மழை பெய்யும் பகுதிகளில் வேகமாக காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.