ராஜஸ்தானுக்கு தடை விதிக்கப்படுமா??

618

BCCIராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதிப்பது குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ செயற்குழு கூட்டம் நேற்று கூடியது.

கடந்த 2008- 2010ம் ஆண்டு வரை ஐபிஎல் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேட்டில் சிக்கியதால், பிசிசிஐ இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இதனையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக லண்டனுக்கு சென்று விட்டார். இருப்பினும் லண்டனில் இருந்தபடி அவர் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியுடன் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

தேர்தல் முடிவு வருகிற 6ம் திகதி வெளியாகிறது. பெரும்பால நிர்வாகிகளின் ஆதரவு லலித்மோடிக்கு இருப்பதால் அவர் மீண்டும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ஆவது உறுதியாகி இருக்கிறது.

இது அவர் இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அடியெடுத்து வைப்பதற்கான முதல் படிக்கட்டாக கருதப்படுகிறது.

லலித்மோடியின் 2வது இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரை எப்படி தடுத்து நிறுத்துவது, அவரை அங்கீகரித்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு தடை விதிக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு சென்னையில் கூடியது.

பி.சி.சி.ஐ செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்.. செயற்குழுவில் இன்று எடுக்கப்படும் முடிவு கிரிக்கெட் அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பாக அமையாது.

வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட லலித் மோடி மீண்டும் வர முயற்சிப்பது குறித்து தான் விவாதிக்கப்படும். எடுக்க வேண்டிய முடிவு குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.