வவுனியாவில் படையினரின் தீவிர பாதுகாப்புடன் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை!!

566

புலமைப்பரிசில் பரீட்சை

வவுனியா பாடசாலை பரீட்சை நிலையங்களில் இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பொலிசார் மற்றும் படையினரின் பாதுகாப்பில் நடைபெற்றது.

இன்று காலை 7.30மணியிலிருந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாடசாலை வளாகத்தில் வகுப்பு ஆசிரியர்களின் ஒழுங்கு படுத்தலின் பின்னர் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு புலமைப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பாடசாலை வளாகத்தில் பொலிசார் மற்றும் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் பொலிசாரின் ரோந்து வாகனங்களும் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று பரீட்சைகள் ஆரம்பித்துள்ளது

நாடு முழுவதும் இம்முறை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் இதற்காக 3050 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. அந்த வகையில் பரீட்சையில் முதலாம் பகுதி காலை 9.30 மணிமுதல் காலை 10.15 மணிவரையிலும் இரண்டாம் பகுதி காலை 10.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் இடம்பெறவுள்ளது.

புலமைப்பரிசில் நிதிக்கான வரையரைக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் பரீட்சைக்கு தோற்றுவது அவசியம் இல்லை எனவும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவது கட்டாயமானது இல்லை எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.