சாரதியின் நெகிழ்ச்சி செயல்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட பணப் பையை ஒப்படைந்த சாரதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி தனது பணப்பையை தவறவிட்டுள்ளார். எனினும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அதனை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

தம்புள்ளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த சுற்றுலா பயணி முச்சக்கர வண்டியில், பணப்பையை விட்டுச் சென்றுள்ளார். எனினும் முச்சக்கர வண்டி சாரதியான சுனில் சாந்த என்பவர், உரிய நபரை தேடிச் சென்று அதனை கொடுத்துள்ளார்.

இத்தாலிய சுற்றுலா பயணி சீகிரிய மற்றும் தம்புள்ளைக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தை முடித்துக் கொண்டு சாரதி வீடு செல்லும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணி பணப்பையை விட்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.

உடனடியாக குறித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி தங்கியிருந்து வீட்டுக்கு சென்ற சாரதி, பணப்பையை கொடுத்துள்ளார். குறித்த பணப்பையில் 1790 யூரோ நாணயம் இருந்துள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் அது 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாகும்.




