நாடு முழுவதும் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 246 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 01 பஸ் சாரதி, 39 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள், 79 முச்சக்கர வண்டி சாரதிகள், வேறு வாகன சாரதிகள் 27 பேர் என மொத்தம் 246 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24ம் திகதி மாலை முதல் இன்று காலை 6 மணி வரையாக காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 1305 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.