கல்லீரலில் நூதனமான முறையில் கையெழுத்திட்ட வைத்தியர் பிடிபட்டார்!!

932

Doctorபிரபல இங்கிலாந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அறுவை சிகிச்சையை முடித்தபிறகு நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பொறித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிமோன் பிரம்ஹால் என்ற அந்த மருத்துவ நிபுணர் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இவரது சக மருத்துவர்கள் கூறுகையில், சிமோன் பிரம்ஹால் இந்த துறையில் மிகவும் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர் ஆவார்.

ஏராளமான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து பிரபலமானவர். சில தினங்களுக்கு முன்பு இவர் சத்திர சிகிச்சை செய்த நோயாளி ஒருவரை பிற வைத்தியர்கள் வழக்கமான பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த நோயாளியின் கல்லீரலை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் எஸ்.பி என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

விசாரணை நடத்தியதில் இயந்திரங்களை ஒட்ட வைக்கும் ஆர்கன் என்ற வாயுவை கொண்டு இவர் மிகவும் நூதன முறையில் அந்த நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

கல்லீரல் என்ன இவர் எழுதும் ஆட்டோகிராப் புத்தகமா அல்லது அறுவை சிகிச்சை என்ன பிராண்ட் விளம்பரமா என வைத்தியர்கள் கொதித்தனர்.

தற்போது துறைரீதியாக விசாரணை நடத்தி சிமோன் பிரம்ஹாலை மருத்துவமனை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்து நாளேடுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.