வவுனியா ஓமந்தையில் பன்றி வீதிக்கு குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம் : இருவர் படுகாயம்!!

625

ஏற்பட்ட விபரீதம்

வவுனியா, ஓமந்தை, சேமமடுப் பகுதியில் வீதியின் குறுக்கே பன்றி பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, சேமமடுப் பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது அவ் வீதி வழியாக வீதியை ஊடறுத்து பன்றி ஒன்று ஓடிச் சென்றுள்ளது.

இதன்போது பன்றியுடன் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் டிப்பர் சாரதி வாகனத்தை வீதியை விட்டு விலகி செலுத்த முற்பட்ட வேளை கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் குறித்த டிப்பரில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர்.

குறித்த விபத்தினை அவதானித்த மக்கள் 1990 அவசர தொலைபேசி இலக்கம் மூலம் தெரியப்படுத்தி நோயாளர் காவு வண்டியை வரவழைத்து காயமடைந்த இருவரையும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். விபத்தில் முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.