தாண்டவமாடும் வறட்சியினால் திண்டாடும் ஐந்தறிவு மிருகம்!!

256

திண்டாடும் ஐந்தறிவு மிருகம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மனிதர்கள் மாத்திரமின்றி மிருகங்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் பிரதான குளங்கள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளும் துரிதமாக வற்றி வருகின்றன.

விவசாய நீர்ப்பாசனம் தொடக்கம் குடிநீர் வரை வழங்கி வருகின்ற அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டமும் வரலாற்றில் முதல் தடவையாக வெகுவாக குறைந்துள்ளது.

அந்தவகையில், இந்த வெப்பத்துடனான காலநிலையினால் பாதிப்படைந்த நாய் ஒன்று உடல் வெப்பத்தை தணிப்பதற்காக நீரில் அமர்ந்துள்ளமை அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த நாய் அரச அலுவலகம் ஒன்றில் உள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தண்ணீர் விநியோகிக்கும் குழாய் நீரை நாடி நீரிலேயே அமர்ந்துள்ளது.

வறட்சி என்பது மனிதர்கள் மத்தியில் மாத்திரம் தாக்கம் செலுத்தக்கூடியதல்ல மாறாக அவை ஐந்து அறிவுடைய மிருகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதென்பது தெரியவருகின்றது.