இலங்கை மக்களின் உயிரை ப லியெடுக்கும் எமனாக மாறும் பேருந்துகள் : வருகிறது புதிய நடைமுறை!!

273

வருகிறது புதிய நடைமுறை

இலங்கையில் அதிக வேகத்தில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 1955 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளின் சாரதிகளை 3 மாதங்களுக்கு பணி நீக்கம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாட்டிற்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக சாரதிகளை தெளிவூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், விபத்தினால் ஒருவர் உ யிரிழந்தால், அந்த சாரதியின் அனுமதி பத்திரம் இரத்து செய்யவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களில் உ யிரிழப்போரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.