வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித்தினால் மக்களிடம் கையளிப்பு!!

595

மாதிரிக் கிராமங்கள்

வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட்டன.

ஒவ்வொன்றும் ஐந்து இலட்சம் பெறுமதியான 52 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் தோட்டச் செய்கைக்கான கடன்கள், வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலாளர், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.