வவுனியாவிலிருந்து 21 லட்சம் பெறுமதியான காரை வெற்றிபெற்ற பெண்!!

649

vavuniya

ஹட்டன் நேஷனல் வங்கியால் நடாத்தப்படும் மாதாந்த சீட்டிழுப்பில் ஒக்டோபர் மாதத்துக்கான 21 லட்சம் பெறுமதியான ஸ்விப்ட் காரை வவுனியாவைச் சேர்ந்த செல்வி இ.சுரபிகா என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார்.

ஹட்டன் நேஷனல் வங்கியில் பேணப்படும் ஏதாவது ஒரு கணக்கில் குறைந்த தொகையாக 10,000 ரூபாவை பேணுபவர்கள் மாதாந்த சீட்டிழுப்பில் கலந்து கொள்ளத் தகுதி பெறுவார்கள்.

இவ்வாறு நடாத்தப்படும் சீட்டிழுப்பில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் பெறுமதிவாய்ந்த பரிசு ஒன்றை வெற்றிபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.