திருகோணமலை – திரியாய 5ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கடற்படை வீரர் குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 வயது சிறுமியும் அவரது தமக்கையாரும் வீட்டில் இருந்தபோதே இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் வழமையாக சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்பவர் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.