வவுனியாவில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தெளிவூட்டல் செயலமர்வு!!

569

தெளிவூட்டல் செயலமர்வு

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான கருத்தமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது. வவுனியாவில் இன்று காலை இந்த கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான சமூக ஊடகங்கள் பற்றிய தெளிவூட்டல், அதன் பாதுகாப்பு, ஊடக மற்றும் தகவல் அறிவினை மேம்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கொழும்பில் இருந்து வருகைதந்த வளவாளர்கள் செயலமர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.