பல மில்லியன் சொத்துகளை தானம் செய்துவிட்டு தற்கொலை செய்த செல்வந்தர்!!

544

Sucideபங்குத்தொழிலில் சம்பாதித்த பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகளையும் தானம் செய்துவிட்டு தனது 87வது வயதில் ஒரு அமெரிக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன் தன்னிடம் மிச்சமிருந்த 100 மில்லியன் டொலர் சொத்துகளையும் இலாப நோக்கில்லாமல் நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனைகள் அளித்துவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்திற்கு அளிப்பதாக எழுதி வைத்துவிட்டு தனது வீட்டின் 16வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரொபட் டபிள்யூ வில்சன் என்ற இந்த செல்வந்தர் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் நடைபெறும் பங்குத்தொழில் வர்ததகத்தில் முன்னணியில் இருந்தார்.

இதில் இவர் சம்பாதித்த தொகையின் மதிப்பு 800 மில்லியன் டொலராகும். பின்னர் சிறந்த கொடைவள்ளலாகவும் மாறினார். இவர் உதவி புரிந்த மற்ற நிறுவனங்களில் நியூயோர்க்கில் உள்ள ரோமன் கத்தோலிக மையம், உலக நினைவு சின்னங்கள் நிதியம், இயற்கை பாதுகாப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு சங்கம் ஆகியவை அடங்கும்.

கடந்த 2010ம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க மையத்திற்கு பெருந்தொகையை அளிக்க அவர் முடிவு செய்தபோது, நிதி குறைபாட்டினால் நாடு முழுவதும் உள்ள அவர்களின் பள்ளிகளை மூடவிருக்கின்றார்கள். பில்கேட்சிடம் இந்தப் பள்ளிகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பணம் இருந்திருந்தால் அவர் கொடுத்திருப்பார் என்று கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னால் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவர் இறப்பதற்கு முன் தான் கஷ்டப்பட விரும்பவில்லை என்று கூறியதாக அவரது நெருங்கிய நண்பர் ஸ்டீபன் விஸ்கசி தெரிவித்தார். சமீபத்தில் அவரை சந்தித்தபோதும் தான் இறப்பதற்கு இன்னும் 100 மில்லியன் டொலர் மீதியிருப்பதாக அவர் குறிப்பிட்டதாகவும் ஸ்டீபன் கூறினார்.

இறந்த ரொபர்ட்டின் சகோதரர் வில்லியம்(88) மட்டுமே இப்போது உயிருடன் இருக்கின்றார். அவருக்கும் குழந்தைகள் இல்லை.