வவுனியா தனியார் பஸ் கம்பனியுடனான பிரச்சினைக்கு ஜனவரியில் இறுதி முடிவு!!

357

busவவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய தனியார் பஸ் போக்குவரத்து பிரச்சினை மற்றும் அண்மையில் இடம்பெற்ற வட மாகாண தனியார் பஸ் சங்க பகிஸ்கரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேச்சு நடாத்துவதற்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் உரியவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி நேற்று மன்னார் நகர சபை மண்டபத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 5 மாவட்டங்களினதும் தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கங்களினதும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் ஒன்றிய உறுப்பினர்களுக்குமான விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் எஸ். ரவிகரனும் கலந்துகொண்டனர். சுமார் 5 மணித்தியாலங்கள் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நேற்றைய கலந்துரையாடலின் பின் ஜனவரி 31வரை வவுனியாவைச் சேர்ந்த 6 பஸ்கள் பரந்தன் ஊடாக புதுக்குடியிருப்புக்கு செல்வதற்கு தற்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான தீர்வு எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் இன்னுமொரு கலந்துரையாடலுடன் எடுக்கப்படும் எனவும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.