புகலிடம் கோர வேண்டிய தேவை இலங்கையர்களுக்கு இல்லை : அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்!!

553

Ausபுகலிடம் கோர வேண்டிய அவசியம் இலங்கையர்களுக்கு இல்லை என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அத்மிரால் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதால் வேறு நாடுகளில் புகலிடம் கோர வேண்டிய அவசியம் இலங்கை பிரஜைகளுக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் புகலிடம் மற்றும் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திதேலியாவிற்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை என திசர தெரிவித்துள்ளார்.

ஆனால் சில இலங்கையர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவதாக அவர் கூறியுள்ளார்.