வரதட்சணை கொடுத்து சீன பெண்னை மணந்த தமிழக பொறியாளர்!!

308


chinna engineer

தமிழக பொறியாளர் ஒருவர் வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை திருமணம் செய்துள்ளார்.



குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர்.

இவர் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் பொறியியல் கம்பனியில்பணியாற்றி வருகிறார்.



இந்த கம்பெனி இருக்கும் பகுதியை சேர்ந்த யு ஜின் ஷாவின் மகள் லிங் ஷீயு சாஓவை சந்தித்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.



அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமிர்தராஜ் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.


உடனே உறவினர்களுடன் சீனா சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சீனா முறைப்படி மணமகன் வீட்டார் நகை, துணிமணிகள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமிர்தராஜ்-லிங் ஷீயு சாஓ திருமணம் கருங்கலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்திய முறைப்படி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிகள், அவருடன் வேலை பார்ப்பவர்கள் என்று மொத்தம் 15 பேர் வந்திருந்தனர்.


பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் லிங் ஷீயு சாஓ சீனாவின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார்.