ஜனாதிபதி மைத்திரியின் மகள் சத்துரிக்காவின் வாகனம் விபத்து!!

5


விபத்து


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் டிபெண்டர் பாதுகாப்பு வாகனம் ஒன்று புத்தல பகுதியில் விபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் டிபெண்டர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற சத்துரிக்கா சிறிசேனவின் வாகனத் தொடரணியில் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்ததுடன் விபத்து இடம்பெற்றபோது அந்த வாகனத்தில் சத்துரிக்கா பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.