முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை?

287


முச்சக்கரவண்டிகளின்..



இலங்கையில் முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப பயண கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுயதொழில் புரிபவர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் சுனில் ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.



இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பானது முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளை பாதித்துள்ளது.




இதனால் கட்டண மீட்டரை அகற்றிவிட்டு பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் அதிகளவானோர் பெருமளவானோர் முச்சக்கரவண்டி பயணிகளாக உள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப பயண கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளமையானது அவர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.