விமானத்தில் திட்டமிட்டு கொ ல்லப்பட்ட கால்பந்து வீரர் எமிலியானோ : விசாரணையில் திருப்பம்!!

133


எமிலியானோ சாலா


ஆஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா திட்டமிட்டு கொ ல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ஆஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, ஜனவரி 21ம் திகதி பிரான்ஸ் நாட்டின் நன்டேஸ் பகுதியில் இருந்து வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, திடீரென விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக ப லியானார்.தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்த கடற்படையினர் 15 நாட்களுக்கு பிறகு அவரது உடலை கண்டுபிடித்தனர். ஆனால் 59 வயதான விமானி, டேவிட் இபோட்சன் உடலை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பிரித்தானியாவின் விமான விபத்து விசாரணைக் கிளை, கார்பன் மோனாக்சைடு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு வெளியேறியதாலே விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.


நச்சுயியல் சோதனையில் சலாவின் இரத்தத்தில் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டேவிட் இபோட்சன் உடலை பொலிஸார் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரும் கார்பன் மோனாக்சைடுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.