மடு திருத்தலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்!!மடு திருத்தலத்தில்..


மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான வின்சன் பெர்னாண்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்களான நோபட் அன்றாடி, பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.


அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும், ஆசிரும் இடம்பெற்றதுடன் இதன்போது நூற்றுக்கணக்கான குருக்கள் கலந்து கொண்டிருந்தனர். முப்படையினரின் பா துகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம்பெற்றுள்ளது.


இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.