அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து : இரு பெண்கள் உட்பட மூவர் பரிதாபமாக பலி!!

8


கோர விபத்து


தம்புள்ளை – ஹபரண வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் ஒரு பெண்ணும் ஆணும் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டுள்ளனர். இந்த வேனில் பயணித்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என இன்னமும் தகவல் வெளியாகவில்லை.


காயமடைந்தவர்கள் யார் என்பது இன்னமும் அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வாகனங்களின் சாரதிகளினதும் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.