வடக்கு உட்பட இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்!!

16


மழைக்கான சாத்தியம்


வடக்கு, வடமத்திய, கிழக்கு சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மழை பொழியும் போது கடும் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


இதனிடையே ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் மற்றும் புத்தளம் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.