வவுனியாவில் கடும் வறட்சிக்கு பின்னர் மழை : மகிழ்ச்சியில் மக்கள்!!

21


வவுனியாவில் கடும் வறட்சிக்கு பின்னர் மழை


வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.


குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மனமகிழ்வடைந்துள்ளனர்.