வயிற்றில் கத்திக்குத்தி காயத்துடன் குட்டையில் ச டலமாக மிதந்த சிறுவன்!!

4


ச டலமாக மிதந்த சிறுவன்


காஞ்சிபுரத்தில் க த்திக்குத்து காயங்களுடன் 16 வயது சிறுவன் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சூர்யா என்கிற 16 வயது சிறுவன், ஜேசிபி இயந்திரம் ஓட்டுபவரிடம் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளான்.


நேற்று விடுமுறை தினம் என்பதால் வெளியில் விளையாட சென்றுவிட்டு நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. மாறாக அப்பகுதியில் இருந்த குட்டையில் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் ச டலமாக மிதந்துள்ளான்.இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் சூர்யாவின் ச டலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


அதில் சூர்யாவின் பக்கத்து வீட்டு சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த சிறுவனும் வேறொருவரிடம் ஜேசிபி உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளான்.


அவர் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் ஜேசிபியை வாடகைக்கு ஓட்டிவந்ததாக தெரிகிறது. இதனை சூர்யா அந்த சிறுவனின் உரிமையாளரிடம் செல்போனில் கூறியுள்ளான். உடனே அந்த உரிமையாளர் சிறுவனை கூப்பிட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆ த்திரமடைந்த அந்த சிறுவன், நேற்று சூர்யாவை தனியாக அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.