பிரசவத்தின் போது பாதுகாப்பாக நின்ற யானைக்கூட்டம் : மிரண்டு போன விவசாயிகள்!!

589

elephantவிவசாய நிலத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை விரட்டிய போது பெண் யானை குட்டியை ஈன்றுள்ளது.

கர்நாடகாவின் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, தமிழக வனப்பகுதிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் 45 நாட்களுக்கு முன் புகுந்தன. இதில் 60 யானைகள் சூளகிரி அடுத்த போடூர்பள்ளத்தின் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.

அப்போது வனத்துறையினர் விரட்டியபோது மீண்டும் போடூர்பள்ளம் வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டன. இங்கிருந்து அகரம் கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் ராகி, நெல், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் பயிர்களை நாசம் செய்தது.

இதனை தொடர்ந்து யானைகளை விவசாயிகள் விரட்டிய போது, பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றது. மற்றவை பெண் யானைக்கும், குட்டிக்கும் பாதுகாப்பாக நின்று கொண்டன.

இதனையடுத்து வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் யானைக் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டி விட்டனர்.