நிச்சயம் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் : கடிதம் எழுதிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கையின் இன்றைய நிலை?

128


திருநங்கை ஷெர்லின்


திருநங்கை ஷெர்லின் தன்னை ஏற்றுக்கொள்ளாத உறவினர்கள் முன் தான் ஒரு ஆடிட்டர் என்ற தகுதியில் அடையாளப்படுத்த வேண்டும் என்று தனது கடின சூழலை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது வாழ்வின் கடினங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த திவாகரன். உடன் பிறந்த இரண்டு சகோதரிகள் அக்கா, தங்கை, அவர்களின் தோழிகள் சூழ வளர்ந்த திவாகரனுள் பெண் தன்மை வளர ஆரம்பித்துள்ளது. சிறுவயதில் ஆண்களோடு விளையாடுவதை விட பெண்களோடு விளையாடுவதை விரும்பி உள்ளார்.


தனக்குள் ஒரு பெண் வளர்வதை அவர் உணர்ந்தும், பள்ளிக்கு, வீடுக்கும் அதை மறைத்து வாழ்வது மிகவும் கடினமான நிலையில் வாழ்ந்துள்ளார். தனது அக்காவுக்குத் திருமண வயது நெருங்கும் போது ‘தான் ஒரு பெண்னு’ வீட்டில் சொன்னால், அது அவளோட வாழ்க்கைக்குப் பிரச்சனை ஆகும் என்ற காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், பரமக்குடியில் ஒரு திருநங்கை அம்மா எனக்கு உதவி புரிந்தார்கள். மற்ற பெரும்பாலான திருநங்கைகள் போல் பா லியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு என்னோட வாழ்க்கை திசை மாறும் அபாயம் இருந்ததால் அந்த இடம் சரி வராதுனு, என் வீட்டுக்கே திரும்பி சென்று விட்டேன்.


இந்நிலையில் அங்கு வீட்டில், எனக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்ய முயற்சி செய்தார்கள் அதனால் நான் மீண்டும் வீட்டை வந்து விட்டேன். அப்போது, கன்னியாஸ்திரி ஒருவரிடம் பயிற்சிக்காகச் சென்றேன். அங்கு எனக்கான கவுன்சலிங் அனைத்தும் கிடைத்தது.

அங்க சந்தித்து ஒரு நபருடன் முதல் காதலும் ஏற்பட்டது. ஆனால் அது ரொம்ப நாள் நிலைச்சு நிற்கலை. அதன் பிறகு மீண்டும் ஊருக்குப் போய்விட்டேன். கடந்த முறையைவிட அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் என்னைச் சுதந்திரமாக, நானாக இருக்க விடாத உறவு எனக்குத் தேவையில்லை என்று என்னை நிச்சயம் என்றைக்காவது ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளுவார்கள் என்று கடிதம் ஒன்றில் எனது மொத்த மனக்குமுறலையும் எழுதிவைத்து விட்டு வீட்டை விட்டுக் கடைசி முறையா வெளியேறினேன்.

அதன் பின் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. ஆடிட்டர் படிப்புக்கான சி.ஏ. இன்டருக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன் . திருநங்கை என்கிற அடையாளத்துடன்தான் அதைப் படிக்கவேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டுள்ளேன்.

இடைப்பட்ட காலத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷும் ஸ்போக்கன் இந்தியும் கற்றுக்கொண்டிருக்கின்றேன். இதனை பலரும் பாராட்டி வருகின்றார்கள். அதுமட்டுமின்றி கனவெல்லாம், நேர்த்தியாக பருத்திப் புடவை உடுத்திக்கொண்டு, காலில் மெல்லியதாக கொலுசு அணிந்துகொண்டு, ’ஷெர்லின் ஜோஸ் சி.ஏ’ என்கிற பட்டத்துடன் திருநங்கை ஆடிட்டராக, ஒரு பெரிய காரில், தன்னைத் தானாக ஏற்க மறுத்த அதே ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். என்று தெரிவித்துள்ளார்.