இலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக இப்படியொரு மோசமான செயலா?

243

கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர்

திவுலபிட்டியவில் சூட்சுமான முறையில் மக்களை ஏமாற்றி கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் காணி அதிகாரியாக நடித்து வீடுகளுக்கு சென்று வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் காணிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக வீட்டில் உள்ளவர்களை புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளர். புகைப்படம் எடுக்கும் போது நகைகளை போட்டு எடுக்க வேண்டாம் என கூறுகின்றார். அவர் கூறுவதனை கேட்கும் மக்கள் நகைகளை அகற்றி அருகில் வைத்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றார்கள்.

பின்னர் தனக்கு குடிக்க தண்ணீர் வழங்குமாறு ஆசிரியர் கேட்கும் நிலையில், தண்ணீர் எடுப்பதற்கு வீட்டவர்கள் செல்லும் சந்தர்ப்பத்தில் அந்த தங்க நகைகளை கொ ள்ளையடித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் நகை அடகு பிடிக்கப்பட்ட பல ரசிதுகளும் பல்வேறு அடையாள அட்டைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நீர்க்கொழும்பில் மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது தாயை வாழ வைப்பதற்காக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குறித்த ஆசிரியர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.