உயிரோடு இருக்கும் 19 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்!!

705

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

தமிழகத்தில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய கல்லூரி மாணவிக்கு, பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்-அமராவதி தம்பதிக்கு 3 மகள்கள்.

பன்னீர்செல்வம் 4 ஆண்டுக்கு முன் திடீரென்று இறந்துள்ளார். 3 மகள்களில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது. 2வது மகள் அபி (19) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 3வது மகள் பள்ளியில் படித்து வந்தார். இந்த குடும்பம் வசிக்கும் பகுதியில் சந்தோஷ் (21) என்பவர் வசித்து வந்த நிலையில் அபிக்கும், சந்தோஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ஆனால் சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் தனது மகளின் காதலை அமராவதி ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அபியின் வீடு அருகில் வசித்து வந்த சந்தோஷ் குடும்பத்தினர், இடையன்குடி சாலையில் பகுதியில் புதிய வீடு கட்டி அங்கு சென்றுவிட்டனர். இருப்பினும் காதல் நீடித்தது.

அதற்கு எதிர்ப்பும் எகிறியது. இதனால் மனமுடைந்த அபி கடந்த 14ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் சந்தோஷை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமான அமராவதி தனது பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்ட தனது மகள் அபி இறந்து விட்டதாக ஊராருக்கு அறிவிப்பதற்காக 100 கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டியது தெரியவந்தது.


இது தொடர்பாக விளக்கமளித்த அமராவதி, சந்தோஷுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவனை தனது மகள் அபி காதலித்து ஓடிபோனதால், அவள் உ யிரிழந்துவிட்டதாக அறிவிக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாகவும் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.

இந்த சம்பவத்தில் இரு தரப்பும் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வ புகார் ஏதும் தெரிவிக்காததால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மகள் காதலனுடன் சென்றதால் அவர் இறந்துவிட்டதாக தாயே போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.