மாலைதீவில் இலங்கையரின் சடலம் மீட்பு!!

598

bodyமாலைதீவின் தனியொரு தீவில் இலங்கையர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் மாலைதீவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாலைதீவு நாட்டின் சில தீவுகளில் பிரபலங்கள் இரகசியமாக தங்களது விடுமுறையை கழிப்பது வழமையானதாகும். மீட்கப்பட்ட சடலம் இலங்கையரது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் இம்முறை தனது கிறிஸ்மஸ் விடுமுறையை மாலைதீவில் கழித்து வருகின்றார். பெக்கம் தங்கியிருந்த தீவிலேயே இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.