வவுனியாவில் சமகால அரசியல் நிலவரங்களை ஆராயும் ரெலோ!!

812

தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் கூட்டம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர்மட்டக் கூட்டம் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலில் பேசப்பட்டது.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை‌‌ உறுப்பினர் பிரசன்னா உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.