கொழும்பு – கொட்டாஞ்சேனையில் பாரிய‌ தீ விபத்து!!

817

Fireகொழும்பு, கொட்டாஞ்சேனையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.20 மணியளவிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இந்த தீயினால் தொழிற்சாலை சுவாலையிட்டு எரிந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில மணித்தியாலங்களில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.