ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 தாதிகளுக்கும் ஒன்றாக பிரசவம் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

630

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தில் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பிள்ளைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


கடந்த மார்ச் மாதம் ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது செவிலியர்களும் கர்ப்பமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர்கள் ஒன்பது பேருக்கும் குழந்தைப் பிறந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த மெயின் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த ஒன்பது செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகினர்.

அந்த செவிலியர்களே சில மாதங்களுக்கு முன் அதைப் புகைப்படமாக எடுத்து மெயின் மெடிக்கல் செண்டர் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தது. பின்னர் அந்த புகைப்படம் வரவேற்பை பெற்றதும் பல ஊடகங்களிலும் பேசப்பட்டது.

தற்போது அந்த ஒன்பது செவிலியர்களுக்கும் குழந்தைப் பிறந்துள்ளது. அந்த ஒன்பது செவிலியர்களும் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்தவாறு புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த புகைப்படத்தில் மூன்று மாதக் குழந்தை தொடங்கி மூன்று வாரக் குழந்தை வரை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.