இளைஞனுக்கு நடந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் புதிதாக வாங்கிய மோட்டார சைக்கிளை மர்மக் கும்பல் ஒன்று பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸாரில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேற்றைய தினம் யாழ். நகரில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் புதிதாக வாங்கியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிளின் பெறுமதி 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஆலயத்துக்கு கொண்டு சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக் கும்பல் இளைஞரை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இச்செயலில் ஈடுபட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




