கொழும்பில் இருந்து யாழ். சென்ற வாகனம் விபத்து : 6 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

650

வாகனம் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் சாலியவெவ 19ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் படுகாயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று, எதிரே பயணித்துக்கொண்டிருந்த லொறியின் பின் பகுதியில் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்னர்.

விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சாலியவெலல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.