பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.
உடனடி தகவல் இந்தியாவுக்கான மைக்ரோசொப்ட் நிறுவன இயக்குனர் ராஜ் பியானி கூறியதாவது..
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இதிலிருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உள்ளது.
கையடக்க தொலைபேசிகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகும்போது அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
ஆபத்து காலத்தில் கையடக்க தொலைபேசியில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், பொலிஸ், பாதுகாப்பு நிறுவனங்கள், பேஸ்புக் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும்.
டிராக்கிங் சிஸ்டம் : இதில் உள்ள தொடுதிரை வசதியின் மூலம் நடக்கும் காட்சிகள் பதிவு செய்யப்படும். இதன் மூலம், குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி, இணையதள வசதி இல்லாமலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
இதில் உள்ள டிராக்கிங் சிஸ்டம் மொபைல் போனை பயன்படுத்தும் நபர் எங்கு உள்ளார் என்பதை அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.





