உடலில் 15 இடங்களில் காயம் : வி ஷம் அருந்தி த ற்கொ லை : சசி தரூர் மனைவி வழக்கில் திடீர் திருப்பம்!!

325

வழக்கில் திடீர் திருப்பம்

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் த ற்கொ லை வழக்கில் அவருடைய உடலில் 15 இடங்களில் கா யம் இருந்ததாக பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மனைவியும், தொழிலதிபருமான சுனந்தா புஷ்கர் (51) கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று டெல்லியில் உள்ள லீலா சொகுசு ஹோட்டலில் நள்ளிரவில் ம ர்மமான முறையில்  இ றந்து கிடந்தார்.


சுனந்தாவிற்கும் அவருடைய கணவருக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோ தல் ஏற்பட்ட சிலமணி நேரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த டெல்லி பொலிஸார்,

சசி தரூர் மனைவியை சி த்ரவதை செய்து த ற்கொ லைக்கு தூண்டியதாக, இந்திய தண்டனையை சட்ட பிரிவு 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினர் ஒரு பெண்ணை கொ டுமைக்கு உட்படுத்துதல்) மற்றும் (ஐபிசி) 306 (த ற்கொ லைக்கு தூ ண்டுதல்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் சசி தரூர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் வழக்கு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் பி ரேத பரிசோதனையின்படி, புஷ்கரின் ம ரணத்திற்கு காரணம் வி ஷம் என்றும், அவரது உடலின் பல்வேறு பாகங்களில் முன்கை, கைகள், கால் போன்றவற்றில் 15 கா யங்கள் காணப்பட்டதாகவும் விசாரணை பொலிஸார் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் தெரிவித்தனர்.

மேலும், இருவருக்கும் இடையிலான ச ச்சரவு காரணமாக புஷ்கர் வருத்தமடைந்து மன வேதனையால் பா திக்கப்பட்டிருந்ததாக சிறப்பு அரசு வக்கீல் அதுல் ஸ்ரீவாஸ்தவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இதனை கேட்டறிந்த நீதிபதி அடுத்தகட்ட வழக்கு விசாரணையை ஆகஸ்டு 31ம் திகதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சசி தரூருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.