மஹியங்கனை, நிதன்கல பிரதேசத்தில் ஆற்றில் மிதந்து வந்த சிசுவொன்றின் சடலத்தை மஹியங்கனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
மஹியங்கனை, நிதன்கலை மற்றும் ஹத்தட்டாவ பிரதேசத்தை அண்மித்த ஆற்றிலிருந்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்பது மாதமுடைய பெண் சிசுவே சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்