கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து கோர விபத்து : இருவர் பலி, 27 பேர் படுகாயம்!!

542

கோர விபத்து

தம்புளை – ஹபரண சாலையில் உள்ள திகம்பத்தஹ பகுதியில்  இன்று காலை இடம்பெற்ற சாலை விபத்தில் இருவர் பலி, 27 பேர் காயமடைந்தனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மஹரகமவில் இருந்து கின்னியா நோக்கிச் சென்ற வேனில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 27 பேர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 பேர் உ யிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக தம்புள்ளை -ஹபரன சாலை அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பிர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.