கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ள இலங்கையர்கள்!!

254

சாதனை படைத்துள்ள இலங்கையர்கள்

ஆபிரிக்கா கண்டத்தின் தான்சானியா நாட்டில் அமைந்துள்ள உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோ மலையில் ஏறிய இலங்கையை சேர்ந்த இளைஞர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார்.

கிளிமாஞ்சாரோ உலகில் தனியாக இருக்கும் உயர்ந்த மலையாகும் என்பதுடன், ஆபிரிக்காவில் உள்ள உயரமான மலையுமாகும்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர்களான 33 வயதான ரங்க மடுபத்ம கங்கபட ஆராச்சி மற்றும் 36 வயதான சுதம் கமகே ஆகியோர் மலை உச்சியை அடைந்து சாதனை படைந்துள்ளனர்.

ரங்க மடுபத்ம கங்கபட ஆராச்சி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலும் சுதம் கமகே இங்கிலாந்தின் மேஞ்சேஸ்டர் நகரிலும் கணக்காய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

மலையேறிய பின்னர் ரங்க மடுபத்ம, துபாயில் இருந்து இன்று அதிகாலை 1.10 கட்டுநாயக்க வந்தடைந்தார். இவரை வரவேற்க பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.