இலங்கையில் தாயை தேடும் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் அக்கா, தம்பி : நெகிழ்ச்சியான பாசப் போராட்டம்!!

301


பிரான்ஸில் வாழும் சகோதரர்கள் இருவர் இலங்கையிலுள்ள தமது பெற்ற தாயை தேடி வருகின்றனர். இலங்கையில் பிறந்து சில மாதங்களில் பிரான்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட இரு பிள்ளைகளே இவ்வாறு தமது தாயை தேடுகின்றனர்.



இரு தாய்மாருக்கு பிறந்த பிள்ளைகள் இருவர், பிரான்ஸ் தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் சகோதரன், சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பிறந்த நிலந்திகே என்ற குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே பிரான்ஸ் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். குறித்த பெண் தற்போது பிரான்ஸில் நடன கலைஞராக பணியாற்றி வருகின்றார்.



1987ஆம் ஆண்டு மற்றுமொரு குழந்தையை அதே பிரான்ஸ் தம்பதியர், இலங்கையில் தத்து எடுத்துள்ளனர். 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி சிறிவர்தன என்ற ஆண் குழந்தையே இவ்வாறு தத்து கொடுக்கப்பட்டுள்ளார்.



32 வருடங்களில் தமது சொந்த தாய்மாரை தேடி அக்காவும் தம்பியும் பிரான்ஸிலிருந்து இலங்கை வந்துள்ளனர். தாய்மாரை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.