இருவர் பரிதாபமாக பலி

மன்னார் – முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்ற போது வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

இதன்போது அளவக்கை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இராசதுரை பிரசாந்த் (வயது 24) , கணேஸ் தயாளன்(வயது19) ஆகிய இரண்டு இளைஞர்களே விபத்தில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நடைபெற்ற இடத்தில் சிறிய வளைவு, வீதியோரத்தில் பற்றைகள் நிறைந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் சாரதிகளுக்கு தென்படுவதில்லையெனவும்,குறித்த இடத்தில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




