ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
நிபந்தனைகளின் அடிப்படையில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் நிலைப்பாட்டை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது.