விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு கிடைத்த புத்தாண்டு வாழ்த்து!!

379

Nasaநேற்று இரவு 12.00 மணிக்கு புத்தாண்டு துவங்கிய நிலையில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விண்வெளியிலிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக நாசா விஞ்ஞானிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்காக நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

சதுக்கத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திலிருந்து நாசா விஞ்ஞானிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் புதிய முறையை நாசா அறிமுகப்படுத்தியதில் ஏராளமானோர் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.