கோர விபத்து

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தி ஒன்றுடன் மகிழூர்தி ஒன்று மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற வேளையில் பாரவூர்தியில் 8 பேர் காணப்பட்டுள்ளதுடன் மகிழூர்தியில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 65 வயதுடைய குருநாகல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




