குரோதங்கள் அற்ற அரசியலே என் எதிர்பார்ப்பாகும் : சனத் ஜயசூரிய!!

529

Sanath-Jayasuriyaவைராக்கியம் மற்றும் குரோதங்கள் அற்ற அரசியல் பயணமே தனது எதிர்பார்ப்பு என தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவை வரவேற்பதற்காக, மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவர் இதனை தெரிவித்தார். நிகழ்வில் கலந்து கருத்து வெளியிட்ட சனத் ஜயசூரிய..

தென் மாகாண சபை தேர்தல் மீண்டும் அண்மித்துள்ளது. பொது மக்களுக்கு பல்வேறு விடயங்களை கூறும் காலமே இது. இந்த விருப்பு வாக்கு முறைமை காரணமாக எனது தொகுதியிலும் பலர் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிப்பார்கள். தற்போது இந்த நிலை பல இடங்கில் நடைப்பெறுகின்றது. இது தொடர்பில் நான் கவலைப்பட போவதில்லை.

வைராக்கியத்துடனும் குரோதத்துடனும் பார்க்கும் போது எந்த வகையிலேனும் வாக்குகளை பெற்றுக் கொள்பவர்களும் உள்ளார்கள். கிடைக்க வேண்டியதிருந்தால் அது கிடைக்கும் என தெரிவித்தார்.

மாத்தறை பிரதான தபால் அலுவலகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் தபால் ஊழியர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.