கொசு கடித்ததால் மரணத்தை தொட்ட இளம்பெண் : மூன்று நிமிடங்கள் துடிக்க மறந்த இதயம்!!

359

துடிக்க மறந்த இதயம்

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கொசு கடித்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டு ம ரணத்தைத் தொட்டுத் திரும்பியிருக்கிறார். எஸ்ஸெக்சைச் சேர்ந்த கிம் ராபின்சன் (25), தனது வீட்டின் பின்புறம் துணி காயப்போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.


அப்போது கொசு ஒன்று அவரை கடிக்க, அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது கிம்முக்கு. மறுநாள் கால் பயங்கரமாக வீங்கியதோடு, அவ்வப்போது தலை சுற்றலும் ஏற்படவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.

காலில் கொசு கடித்த கா யத்தின் வழியே பயங்கர கிருமி ஒன்று உடலுக்குள் நுழைந்ததால் கிம்மின் உடல் முழுவதும் ப யங்கரமாக வீங்கிவிட, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காலை அகற்ற வேண்டியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். தனது காலை அகற்றினால் தன்னை மீண்டும் மயக்கத்திலிருந்து எழுப்பவே வேண்டாம் என்று கூறியிருக்கிறார் கிம்.

மருத்துவர்கள் அவரது காலில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, உடல் முழுவதும் அந்த கிருமியின் நச்சுத்தொற்று பரவி விட்டதால் கிம்முடைய இதயம் துடிப்பதை நிறுத்தியிருக்கிறது.
கிட்டத்தட்ட அவர் இ றந்து போனதையொத்த ஒரு சம்பவத்திற்குப்பிறகு, மூன்று நிமிடங்கள் ஆனதும், மீண்டும் அவரது இதயம் துடிக்கத் தொடங்கியுள்ளது. அவரது காலிலுள்ள பாதிக்கப்பட்ட சதையை அகற்றிய மருத்துவர்கள், கிம்மின் வயிற்றிலிருந்து தோலை எடுத்து காலில் வைத்து தைத்திருக்கிறார்கள்.

பின்னர் மருத்துவ ரீதியிலான கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட கிம், ஐந்து நாட்கள் கோமாவிலேயே இருந்திருக்கிறார். கோமாவிலிருந்து எழுந்தபின், பேசுவது, நடப்பது, கைகளை பயன்படுத்துவது என எல்லாவற்றையும் மறந்து போன கிம்முக்கு, மீண்டும் அடிப்படை செயல்கள் அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கொசுக்கடியில் தொடங்கிய பிரச்சினை தான் மூன்று நிமிடங்கள் உ யிரிழக்கும் நிலைக்கு தன்னை ஆளாக்கியிருப்பதைக் குறித்து கேள்விப்பட்டதிலிருந்து அச்சத்திலேயே இருப்பதாக கூறியுள்ள கிம், குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்களை அணிவித்துள்ளாராம். கிம்முடைய கால்களை சரி செய்ய இன்னும் அவருக்கு இன்னும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.