வவுனியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!!

442

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் செப்டம்பர் மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

அரச அங்கீகாரம் பெற்ற NVQ3 மற்றும் NVQ4 கற்கைநெறியை பூர்த்திசெய்வதன் மூலம் அடுத்தகட்டமாக உங்கள் பட்டதாரியாகும் கனவை நனவாக்குங்கள்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்புக்கொள்ளுங்கள். பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் அடுத்தமாதம் (செப்டம்பர்) ஆரம்பமாகவுள்ளன.

1. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (Information Telecommunication Technician) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், போதனாமொழி,ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

2. கள உதவியாளர் விவசாயம் (Filed Assistant Agriculture) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் ஏதாவது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

3. அலுவலக முகாமைத்துவம் – NVQ3 (Office Management) : தகைமைகள் : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) ஏதாவது 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

4. ஆங்கில தொடர்பாடல் (BCS, DCS, ACS) – NVQ3. தகைமைகள் : தரம் 11 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : ஆங்கிலம் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

தொடர்புகளுக்கு

அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா

024 2223664
024 2050177
024 2050177