7 ஆயிரம் விக்கெட்டுகள் : 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை : 85 வயதில் ஓய்வு அறிவித்த வீரர்!!Cecil Wright


மேற்கிந்திய தீவுகளின் ஜமைக்காவைச் சேர்ந்த 85 வயது வேகப்பந்து வீச்சாளர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான Cecil Wright, 1959ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற லான்கா ஷையர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக சென்றார்.அங்கிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அவர், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடினார்.
தனது 49வது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடினார் Cecil Wright.


தன் 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், இதுவரை 7 ஆயிரம் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். குறிப்பாக, 5 சீசன்களில் 538 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரம்மிக்க வைத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் 7ஆம் திகதி நடைபெறும் Springhead அணிக்கு எதிரான போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் Cecil Wright கூறுகையில், ‘காயம் இல்லாமல் உடல் தகுதியை சரியாக கவனித்துக் கொண்டது தான் இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம்.


உணவைப் பொறுத்தவரை எதையும் சாப்பிடுவேன். ஆனால், அதிகமாக மது குடிக்க மாட்டேன். பீர் மட்டும் எப்போதாவது அருந்துவேன். பயிற்சி இல்லாமல் இருந்ததில்லை. வீட்டில் அமர்ந்து ரிவி பார்க்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.