வவுனியாவில் நடந்த விபத்தில் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் படுகாயம்!!

504

Accidentகடந்த 31ம் திகதி வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நாற்சந்தியில் நடந்த விபத்தில் இறம்பைக்குளம் பாடசாலைஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கடந்த 31ம் திகதி வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் கித்துள் வீதிக்கு அருகில் வவுனியா மாவட்ட சுகாதார அதிகாரி பயணம் செய்த வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைத்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

இவ் விபத்தில் படுகாயமடைந்தவர் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆசிரியரான திருமதி. செல்வராஜா என்பவராவர்.